நம் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க
சனி, 31 மார்ச், 2012
குழந்தைகள் என்றாலே விளையாடுவது, உறங்குவது என்றில்லாமல், அவர்களையும் சிறு சிறு வேலைகளை செய்ய பழக்குங்கள். ஏன் என்றால், சிறு சிறு வேலைகளை செய்வது உடற்பயிற்சியாக அமைந்து அவர்களது உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
முந்தைய காலத்தில் தெருவில் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததால், பெரிதாக குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகள் தேவைப்படவில்லை. ஆனால் இப்போது குழந்தைகளுக்கு விளையாட நேரமோ, இடமோ இருப்பதில்லை.
எனவே, குழந்தைகளின் உடல் இயக்கத்தை ஊக்குவிக்கு வீட்டில் சிறு சிறு வேலைகளை செய்யப் பழக்கலாம். அவர்களது துணிகளை மடித்து வைப்பது, வீட்டில் களைந்திருக்கும் பொருட்களை சீரமைப்பது, சாப்பிட்டதும், உணவு சமைத்த பாத்திரங்களை சிங்கில் போட வைப்பது போன்ற வேலைகளை செய்ய வைக்கலாம்.
இதனால் அவரது உடல் இயக்கம் அதிகரித்து இளம் வயதிலேயே உடல் பருமனில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளை நடக்க வைக்காமல் தூக்கிக் கொண்டு செல்வதோ, வண்டியிலேயே எல்லா இடத்திற்கும் செல்வதையும் தவிர்த்து அவர்களை தேவையான அளவு நடக்க விடுங்கள். அவர்களது சுமையை அவர்களே தூக்கிச் செல்ல அனுமதியுங்கள். இது அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.