உங்கள் வருகைக்கு நன்றி

சத்து மாவு பயன்களும், தயாரிக்கும் முறைகளும்.

வியாழன், 29 டிசம்பர், 2011

பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து  சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்துமாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை எம்.பி நகரை சேர்ந்த ஷகிலாபேகம். அவர் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக சத்துமாவு கூழ் பருகுவது வழக்கத்தில் உள்ளது. தினசரி காலை ஒரு டம்ளர் தண்ணீரை  கொதிக்க வைத்து அதில் 2 ஸ்பூன் சத்து மாவை போட்டு காய்ச்சி டீ, காபிக்கு பதிலாக குடிப்பார்கள். சத்துமாவுக்கு இருக்கும் தேவையை அறிந்து போகன்வில்லா மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரித்து விற்க முடிவு செய்தோம். எங்களுக்கு தனியாக பயிற்சி தேவைப்படவில்லை. வீட்டில் தயாரித்த அனுபவமே கைகொடுத்தது. நாங்கள் தயாரித்த சத்து மாவை தெரிந்தவர்களுக்கு  குறைந்த லாபத்தில் விற்றோம். 

எங்கள் தயாரிப்பின் சுவை, மணம், தரம் அவர்களை கவர்ந்தது.தானியங்களை முளை கட்டி, காய வைத்து, அரைக்கும் வேலை மிச்சமானதால் தொடர்ந்து எங்களிடம் வாங்கினர்.  இதன்மூலம் எங்கள் தயாரிப்பு பிரபலமானது. பின்னர் படிப்படியாக புதிய வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மாவை அறிமுகப்படுத்தினோம். கடைகளுக்கும் விற்றோம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ள ஏற்ற தொழில் இது. மக்களுக்கு ஆரோக்கியமான உணவை விற்கிறோம் என்ற மனநிறைவு இத்தொழிலில் உண்டு.

சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள். 

தயாரிக்கும் முறை 

தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ (ரூ.34), சோளம் 2 கிலோ (ரூ.40), கம்பு 2 கிலோ (ரூ.32), பாசிப்பயறு அரை கிலோ (ரூ.28), கொள்ளு அரை கிலோ (ரூ.10), மக்காசோளம் 2 கிலோ(ரூ.28), பொட்டுக்கடலை ஒரு கிலோ (ரூ.70), சோயா ஒரு கிலோ (ரூ.58), தினை அரை கிலோ (ரூ.18), கருப்பு உளுந்து அரை கிலோ (ரூ.30), சம்பா கோதுமை அரை கிலோ (ரூ.30), பார்லி அரை கிலோ (ரூ.30), நிலக்கடலை அரை கிலோ (ரூ.40), அவல் அரை கிலோ (ரூ.40), ஜவ்வரிசி அரை கிலோ (ரூ.25), வெள்ளை எள் 100 கிராம் (ரூ.12), கசகசா 50 கிராம் (ரூ.30), ஏலம் 50 கிராம் (ரூ.50), முந்திரி 50 கிராம் (ரூ.25), சாரப்பருப்பு 50 கிராம் (ரூ.25), பாதாம் 50 கிராம் (ரூ.25), ஓமம் 50 கிராம் (ரூ.15), சுக்கு 50 கிராம் (ரூ.15), பிஸ்தா 50 கிராம் (ரூ.20), ஜாதிக்காய் 2 (ரூ.5), மாசிக்காய் 2 (ரூ.5), 
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். 

பயன்கள்

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க  வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர்  சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும். 
 
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

6
மாதம் கெடாது 

சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

உற்பத்தி செலவு: தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ.740. அரவை கூலி கிலோ ரூ.4 வீதம் ரூ.60. 1 ஆள் கூலி ரூ.150, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.950. மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.23,750, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.1,250. மொத்த மாத செலவு ரூ.25,000.

வருவாய்: 15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.120 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,440. 25 நாளில் வருவாய் ரூ.36,000. செலவு போக லாபம் ரூ.11,000.

சந்தை வாய்ப்பு : பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். சத்துமாவை  தற்போது மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. 

Read more...

அதிக லாபம் தரும் கொத்தமல்லி சாகுபடி

புதன், 28 டிசம்பர், 2011

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 

உலக அளவில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது.
ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது.
குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லியில் அதிக மகசூல் எடுக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கொத்தமல்லி பெருமளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம். சாகுபடி முறைகள்: நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும். கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை.
 
முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். இலைவழி உரமாக 19:19:19-30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும். பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும். நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும். கொத்தமல்லி விதை (தனியா) உற்பத்தி, கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் விலை முன் அறிவிப்பு செய்யும்.

Coriander picture

Read more...

மன அழுத்தம் குறைய வேண்டுமா

பரபரப்பான இன்றைய சூழலில் காலையில் எழுந்தது முதல் நிற்க கூட நேரமில்லாமல் எப்பொழுதும்   ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. விடுமுறை நாளில் கொஞ்சமாவது ஓய்வெடுக்கச்சொல்லி உடல் கெஞ்சினாலும், வேலைப்பளுவினால் ஓடவேண்டிய சூழல் ஏற்படுகிறது.   விளைவு, மனஅழுத்தம், பயம், அதனால் ஆரோக்கிய சீர்கேட்டில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. எனவே ஓய்வின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள். ஓய்வு என்பது கண்ணை மூடி உறங்குவது மட்டுமல்ல. ஓய்வு குறித்து மருத்துவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்கள் 

அதிகாலை விழிப்பது

வைகறைத் துயில் எழு என்றனர் நம் முன்னோர்கள். அதிகாலை சுபுஹுக்கு எழுந்து வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் எந்தவித பதற்றமோ, படபடப்போ இருக்காது. அன்றைய பணிகளை அமைதியாக திட்டமிட அந்த நிமிடங்கள் ஏற்றவை. அதுவும் கூட ஒருவித ஓய்வுதான்.

தொழுகை அவசியம்

தொழுகை போன்றவை மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக்கும். உடற்பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே அது பற்றிய புத்தகங்களை படிப்பது. அது தொடர்பான சி.டி பார்ப்பது சற்று ஓய்வான மனநிலையை தரும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்வது மனத்தையும் உடலையும் நல்ல ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லும். 

நடனமாடுவது லேசாக்கும்

மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது, வாய்விட்டு பாடுவது மனதை லேசாக்கும். அதேபோல் விருப்பமான பாடலுக்கு நடனமாடுவது உடலையும், உள்ளத்தையும் வானத்தில் பறக்கவைக்கும். இதன்மூலம் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய தெம்பு கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் அதனால்தான் ஆடல்நாயகனான சிவபெருமான் அழித்தல் தொழிலை கையில் வைத்திருந்தாலும் ரிலாக்ஸ்சாக தாண்டவம் ஆடியவாறு காட்சி தருகிறார். இறைவன் உணர்த்தும் தத்துவமும் அதுதான்.

நகைச்சுவை உணர்வு

நகைச்சுவை என்பது மிகப்பெரிய ஓய்வு நிலையை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் செய்யும் வேலையில் உள்ள சுமைகளை குறைப்பதில் நகைச்சுவைக்கு பங்குண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் பேசி சிரிப்பது ஒரு ஓய்வு மனநிலையை தரும். பணி சுமையை குறைக்கும். வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியில் அழுகுனி சீரியல்களைப் பார்க்காமல்,   டிவிடியில் காமெடியான   சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.

விடுமுறை மாற்றங்கள்

விடுமுறை நாட்களில் சற்றே மாற்றமாக சமையலில் உதவி செய்வது, துணி துவைப்பது என வீட்டு வேலைகளில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய ஓய்வினை தரும். மாலை நேரங்களில் காற்றாட   நடப்பதும். அமைதியான ரெஸ்டாரென்டுக்கு சென்று மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்தோடு சாப்பிடுவதும் சோர்வை நீக்கி உற்சாகத்தை தரும்.

இரவு நேர பிரார்த்தனை

இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். அப்புறம் சோர்வு எங்கே எட்டிப்பார்க்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம்கையில்தான் இருக்கிறது. ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். ஓய்வின் மூலம் நோயை விரட்டி ஆரோக்கியத்தை அடையலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.


Read more...

தென்னை டானிக், அமிர்த்த கரைசல் தயாரிப்பும்

செவ்வாய், 27 டிசம்பர், 2011


அதிக விளைச்சலுக்கு புதிய பயிர் ஊக்கிகள்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் குறைந்த செலவில் அதிக பலன் அளிக்கும் விதத்தில் "தென்னை டானிக்என்ற தொழில்நுட்பத்தை 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கடந்த 8 ஆண்டுகளாக உழவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பயிர் வினையியல் துறையினரால் கடந்த 2009-2010, 2010-2011ஆம் ஆண்டுகளில் 5 பயிர் மேலாண்மைத்தொழில் நுட்பங்கள் வெளியிடப் பட்டது. இதில் முறையே பயறுவகைப் பயிர்களான பாசிப்பயறுஉளுந்துதுவரைக்கு "த.வே.ப.க. பயறு ஒண்டர்', நிலக்கடலைக்கு "த.வே.ப.க. நிலக்கடலை ரிச்'; பருத்திக்கு "த.வே.ப.க.பருத்தி பிளஸ்'; கரும்பிற்கு த.வே.ப.க. கரும்பு பூஸ்டர்', மக்காச் சோளத்திற்கு "த.வே.ப.க. மக்காச்சோள மேக்சிம்ஆகிய பயிர் பூஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய தொழில் நுட்பங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்ட பயிர்களில் பல்வேறு பருவங்களில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் வினையியல் குறைபாடுகளை கண்டறிந்து அவைகளின் பங்களிப்பினால் ஏற்படும் விளைச்சல் இழப்பை ஈடுகட்டி நிலைநிறுத்துவதற்காக கண்டறியப்பட்டதாகும்.
விவசாயிகள் பல்வேறு பயிர் ஊக்கிகளைப் பயிர் வினையியல் துறை மூலமாகவோ அல்லது மாவட்டம்தோறும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாகவோ பெற்று பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம் என தமிழ்நாடு வே.ப.கழக துணைவேந்தர் ப.முருகேசபூபதி கேட்டுக் கொள்கிறார்.

அமிர்த்த கரைசல்தயாரிப்பு முறைமாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம்ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். (தகவல்இயற்கை வேளாண்மைஅ முதல் ஃ வரைபொன்.செந்தில்குமார்)
-
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன். 

Read more...

ஸ்பைருலினா பாசி வளர்ப்பு

வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்லகால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலினா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்கு கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். 60 முதல் 65 சதம் புரதச்சத்து உள்ள பாசி. கிலோ ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விலைபோகும்.
சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள் சீனாவில் இருந்துதான் இந்த பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய உற்பத்திக்கு மதிப்பு கூடி இருக்கிறது. ஸ்பைருலினா பாசி விற்பனை குறித்து மேலும் 
தகவல்பெற தொடர்பு முகவரி:
டாக்டர் கி.ராவணேஸ்வரன்உதவி பேராசிரியர் மற்றும் "பேராசிரியர் மற்றும் தலைவர்மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,   மாதவரம் பால்பண்ணை காலனிசென்னை-5. தொலைபேசி: 044-2555 6750'.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets